Powered By Blogger
Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Wednesday, 19 June 2019


PROUD TO BE SINGLE:

Don't think, I can't able to pair with anyone⚡💫.....

because the unpaired(single) electron only has the freedom & plays a major role in materials.💥

நெடுந்தூரப் பேருந்துப் 
பயணங்களிலும்,
நெடுநேர
இளையராஜாவிலும்,
நெடும்பக்கங்கள் நீளும்
புத்தக வாசிப்பிலும்,
துரத்திக் கொண்டிருந்த
தனிமை நீங்கி
உணரப்படும்
உன் அருகாமையும்
பேரின்பமாய்த்தான் இருக்கிறது...

Friday, 14 June 2019


              பள்ளிப் பருவங்களில் உரிந்திருக்கும் கைகளைக் காட்டி, "நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்" என்று தோழிகள் சொன்னவுடன், ஐந்து ரூபாய்க்கு வாங்கிய பசையைக் கைகளில் தடவிக் கொண்டு காய்ந்த பின் உரித்துக் காட்டி, "நானும் தான் வளர்கிறேன்" என்று சொல்லி ஆனந்தமடைந்திருக்கிறேன்..
               இன்றும் உள்ளங்கைகளில் உரிந்திருக்கும் தோலை உற்று நோக்குகையில் ஒளிந்திருக்கும் பால்யம் கண்களில் ஒட்டுகிறது பசை பசையாக...

தனிமை வேறு..
தனித்து இயங்கும் தன்மை வேறு...
ஒரு சிலர் ஏன் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை..

             ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்...
உங்களுக்குக் கவிதைகளில் ஆர்வம் அதிகம் போல, என்று பேச்சுக் கொடுத்தார்..
ஆமாம் என்றேன்..

எந்த மாதிரியான கவிதைகளில் ஆர்வம், மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்றார்..
நான் நவீனக் கவிதைகள் என்றேன்..
ஓ, புதுக்கவிதையா என்றார்...
இல்லை, நவீனக் கவிதைகள் என்றேன்...
மறுபடியும், அது தான் மா.. புதுக்கவிதைகள் தானே என்றார்...
புதுக்கவிதைகள் இல்லைங்க அம்மா.. இவை புதிய கவிதைகள் என்று கூறிவிட்டு வந்து விட்டேன்...
சங்க காலத்தையே தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர்கள் ஏன் சம காலத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று எண்ணும்போது பெரும் வேதனையாக இருக்கிறது...

               ஒரு சில குறிப்பிட்ட தனித்துவம்(முக்கியமாகக் கல்வி சார்ந்த விசயங்களில்) உடலுறுப்புகளைப் போல் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று சிலர் எதற்காக எதிர்பார்க்கிறார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது..

நாம் கடினமாக உழைத்துச் செய்து சாதித்தவற்றை, அனுதாபத்தின் மூலம் சாதித்துக் கொண்டவர்கள் குறித்து என்னை ஏதும் கேட்காதீர்கள்... நமக்கு அந்த அளவிற்கு அறிவு போதாது...

பல துரோகங்களைக் கடந்த பின்பு, அதீத அன்பைச் செலுத்தும் யாரிடமும் பயமே உற்பத்தியாகிறது...

இரண்டு விதமான விருந்தினர் வீடுகள் உள்ளன...
முதலாவது, விருந்தினர்கள் எதாவது வேலை செய்தால் கூட, நீங்க உட்காருங்க நான் செய்து கொள்கிறேன் என்று, பார்த்துப் பார்த்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துக் கவனித்துக் கொள்வது...
இரண்டாவது, விருந்தினர்கள் வேலை செய்யும்போது, செய்யட்டும் என்று ஹாயாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பது...