பள்ளிப் பருவங்களில் உரிந்திருக்கும் கைகளைக் காட்டி, "நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்" என்று தோழிகள் சொன்னவுடன், ஐந்து ரூபாய்க்கு வாங்கிய பசையைக் கைகளில் தடவிக் கொண்டு காய்ந்த பின் உரித்துக் காட்டி, "நானும் தான் வளர்கிறேன்" என்று சொல்லி ஆனந்தமடைந்திருக்கிறேன்..
இன்றும் உள்ளங்கைகளில் உரிந்திருக்கும் தோலை உற்று நோக்குகையில் ஒளிந்திருக்கும் பால்யம் கண்களில் ஒட்டுகிறது பசை பசையாக...
No comments:
Post a Comment