ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்...
உங்களுக்குக் கவிதைகளில் ஆர்வம் அதிகம் போல, என்று பேச்சுக் கொடுத்தார்..
ஆமாம் என்றேன்..
எந்த மாதிரியான கவிதைகளில் ஆர்வம், மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்றார்..
நான் நவீனக் கவிதைகள் என்றேன்..
ஓ, புதுக்கவிதையா என்றார்...
இல்லை, நவீனக் கவிதைகள் என்றேன்...
மறுபடியும், அது தான் மா.. புதுக்கவிதைகள் தானே என்றார்...
புதுக்கவிதைகள் இல்லைங்க அம்மா.. இவை புதிய கவிதைகள் என்று கூறிவிட்டு வந்து விட்டேன்...
சங்க காலத்தையே தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர்கள் ஏன் சம காலத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று எண்ணும்போது பெரும் வேதனையாக இருக்கிறது...
No comments:
Post a Comment