Powered By Blogger

Friday, 11 October 2019

சொல்லவொன்னா மாலையொன்றின் கன்னிகள்


யாருடைய காதுகளாலும்
பகிர்ந்து கொள்ளாத ஓசைகள்

யாருடைய சுவாசத்திலும் சிக்கிவிடாத
மரமல்லி-வாகைப் பூக்களின் சுகந்தம்

எல்லாக் கண்களும்
கவனிக்கத் தவறிய
மாலையின் நிறப்பொழிவு

காதுகளுக்கு வெகு அருகில் இளையராஜா
இருளின் குளிர்மை


கடிகாரத்தைக் கண்டுகொள்ளாத இவ்விருப்பு
காரணமற்ற காத்திருப்பு

இவை பிடித்திருக்கிறது
இத்தனிமை பிடித்திருக்கிறது

இன்னும் இன்னும்
இன்னின்னும் பிடித்திருக்கிறது

யாருமற்ற இடத்தில் தான் 
பிரிவுப்பெருந்துயரின் ஜீவனிருக்கிறது

No comments:

Post a Comment