இரண்டாண்டுகளுக்கு முன்பான
இதே போலொரு
மார்ச் மாதத் துவக்கம் தான்
வீட்டை மறந்ததொரு
கோடையைக் கொணர்ந்தளித்தது...
குடையை ஊடுறுவத் துணிந்த வெம்மையில்
உலர்ந்த சருகுகளை
நீ உருட்டியும்
நான் மிதித்தும்
சலசலத்து விளையாடிய
மதியங்களை மறக்கமாட்டாய் தானே காற்றே....
No comments:
Post a Comment