6ம் வகுப்பு... ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கு மாறிய தருணம்... முதல் முறை ஓவியத்தில் வாங்கிய பரிசு... முதன்முதலாக இந்த வயதில் தான் பள்ளிக்குச் சென்று வர அப்பா மிதிவண்டி வாங்கித் தந்திருந்தார்...
அப்பா எனக்குத் தனித்து இயங்குதலைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்த வயதும் இது தான்... இந்நாள் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களில் கல்லூரிகளில் சேர்க்கையின் போதும் Tc வாங்கும்போதும் கையெழுத்திட மட்டுமே வந்திருக்கிறார்... கவிதை, கட்டுரைப் போட்டிகள், பரிசுகள், பயணங்கள், தேர்வுகள், இலக்கிய சந்திப்புகள், பட்டமளிப்பு விழா ,பல்வேறு பகுதிகளின் புத்தகக் கண்காட்சிகள் என்று எத்தனையோ நிகழ்ந்து விட்டன... எங்கேயும் போக வேண்டாமென்று தடுத்ததில்லை... உடன் வந்ததுமில்லை... யாரையும் சாராது, தன்னிச்சையாக எங்கேயும் சென்று திரும்புமளவு பழக்கப்படுத்தியதன் முதற்புள்ளி...
அன்று தொடங்கி இன்று வரை, Avon cycle மட்டுமே Yamaha Alpha ஆகியிருக்கிறது... மற்றபடி அப்பா அப்பாவாகவே தான் இருக்கிறார்...
No comments:
Post a Comment