Powered By Blogger

Friday, 14 June 2019


அந்திமாலைப் பொழுதொன்றில்
அப்பாவும் நானும்
தார்ச்சாலையின் ஓரம்
நடந்து கொண்டிருக்கிறோம்..
கண்களை அகலத் திறந்து மூடி
அதன் கருப்பு நிறத்தைப் பிடித்து
அண்ணார்ந்து பார்த்தபடி
காற்றில் பூசிக்கொண்டிருந்தேன்..

கைகளை உயர்த்திக்காட்டிய
அப்பா அவற்றை
மழைமுகில் என்கிறார்..

சுண்டுவிரலைப் பற்றியபடியே
மீண்டும் மீண்டும்
சிமிட்டிப் பார்க்கிறேன்-
என் கண்களுக்குள்ளும்
மீந்திருந்தன
சில மழைமுகில்கள்...

No comments:

Post a Comment