Powered By Blogger

Friday, 14 June 2019


கடந்து போனதும் 
கடந்துபோகக் காத்திருப்பதுமாகிய 
மனச்சிதைவின் 
துயரத்தின் 
பெருவலியின் சொற்ப்பிரதிகள் 
அழுத்த வெம்மையில் 
உருகித் திரண்டு, 
கண்ணீராக மட்டும் 
மொழி பெயர்க்கும் பிரயத்தனத்தில் 
மென்னி பிடித்தழுத்திக் கொண்டிருக்கிறது.. 
அரூபத்தை ரூபிக்கும் 
ரசவாதங்கள் அறியா நிலையில், 
இறுக்கியணைத்துக் 
கேவியழுவதற்கான தோள்களுக்காக 
ஏங்கிக் கிடத்தலைத் தவிர்த்து 
ஏதொன்றும் செய்யவொன்னா நிலையில் 
தொக்கி நிற்கிறேன் அப்பா...

No comments:

Post a Comment