கடும்பனி பெய்பொழுதுகளில்
கிட்டிக்கும் பற்களின்
தாளப் பின்னணியில்
மனத்துள் அழுந்திப் பாவும்
வலி போன்ற உணர்வு
முகிழ்க்கும் போதெல்லாம்
சூழலிலிருந்தும் இத்யாதிகளிலிருந்தும்
தன்னைப்பிரித்துக் கொண்டுபோய்
அந்நியத்தில் அடைத்து
அடைகாத்துக் கொள்ளவே
விழைகிறேன் அப்பா...
No comments:
Post a Comment