(20-July-2017)
வானவில்லின் வடிவங்கள்
************************
************************
சிறுவயதிலிருந்து பல வானவில்களைக் கண்டதுண்டு.. சிறிதும் பெரிதுமாகத் தேய்வும் தெளிவுமாகப் பலதும் அடங்கும்...
வானவில்லைக் காணத் தோன்றும் போதெல்லாம் கண்ணாடி போன்ற பொருளாலான அளவி(Scale)யை வெளிச்ச வெளியில் காட்டிக் காண்போம்...
அறிவியல் வகுப்பொன்றில் முப்பட்டகத்தை வைத்து வடித்து வெள்ளைத் தாளில் வானவில்லைக் கவிழ்த்துக் கொட்டியிருந்தோம்... ஆய்வகங்களில் இன்னும் பல வழிகளிலும் நிறப்பிரிகை நிகழ்த்தியதுண்டு...
இரண்டாண்டுகளுக்கு முன் கைபேசியில் கூடப் படம்பிடிக்க இயலாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான அரைவட்ட வானவில் கூடப் புறநகர் நெடுஞ்சாலையருகே வளைந்து கிடந்தது...
அவ்வப்போது பல்கலைக் கழகத்துப் புல்வெளி நீரூற்றில் காலை உதயக் கதிர்கள் விழுந்து வானவில்லைச் சிதறிக் கொண்டிருக்கும்..
விடுதியில் கடந்திருந்த அன்றாடத் துணி துவைப்பின் சோப்பு நுரைகளுக்குள்ளும் சுருண்டு படுத்திருக்கும்... இன்னும் சில பொருட்களின் பளபளப்பிலும் தான்...
கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பின்பான இன்றைய மாலையில் தான், கிழக்கின் கீழே கருமேகப் பிண்ணனி சிறிய வானவில் ஒன்றைத் தோய்த்து அப்பியிருந்தது...
No comments:
Post a Comment