Powered By Blogger

Friday, 14 June 2019

             ஒரு படைப்பாளியின் படைப்பில் சொல்லப்பட்ட வலி அல்லது உணர்வு ஏதோவொரு புள்ளியில் வாசகனின் சூழலோடு மனநிலையோடு ஒத்துப்போய்விடுமாயின் அந்தக்கணம் தொடங்கி வாசகன் அந்தப் படைப்பைக் கொண்டாடத் துவங்கி விடுகிறான்..
நான் உனது மூன்றாம் கண் கவிதைத் தொகுப்பிலிருந்து...
Ilankaviarul Selvan
//உண்மையை யாரும் விரும்புவதில்லை
யாரிடமும் உறவாடத் தெரியவில்லை
சிக்கலானவனாக இருக்கிறேன்
என்னைக் கண்டதும் பீதியடைகிறார்கள்
நிராகரிப்பின் வலி கொடூரமானது
இவற்றையெல்லாம் உணர்ந்த நண்பனைத்
தேடிக் களைத்து நித்திரையில் இருக்கிறேன்
யார் எனது நண்பன்?
அவனால் மட்டும் எழுப்ப முடியும்..//

No comments:

Post a Comment