இளையராஜா
இரண்டு பக்கக் காதொலிப்பானிலிருந்தும்
உருகியொழுகி நிரம்ப
இறுகித் தளர்ந்து
துளிர்த்து மூடிய கண்களில்
குருதி கசியத்
தொய்ந்து மயங்கி
தபேலாவில் லயித்திருக்கும்போது தானா
வயலினைக் கொண்டு வந்து
இழுத்தறுத்துக் கொல்ல வேண்டும்
ராஜா.. கொடும்பாதகா....
துளிர்த்து மூடிய கண்களில்
குருதி கசியத்
தொய்ந்து மயங்கி
தபேலாவில் லயித்திருக்கும்போது தானா
வயலினைக் கொண்டு வந்து
இழுத்தறுத்துக் கொல்ல வேண்டும்
ராஜா.. கொடும்பாதகா....
No comments:
Post a Comment