Powered By Blogger

Wednesday, 27 November 2019


இரண்டு உதடுகளையும் 
ஒருங்கே மடித்து உள்ளிழுத்தவாறே 
புருவங்களுயர்த்தி நெரித்து 
'என்ன'வென்பது போலத் 
தலையை முன்தள்ளிக் 
கூர்ந்து நோக்கி
நீ கேட்பதில் 
உன்னிடம் அடிமைப்பட்டு விடுகிறது 
சர்வமுமெனக்கு...

No comments:

Post a Comment