Powered By Blogger

Friday, 10 January 2020



பிரபஞ்சத்தின் ஆழிப் பேரலைகள்
சூழப்பட்ட கடலொன்று
கரையில் நிற்கும் பெண்ணொருத்தியின்
கண்களாகப் பரிணமிக்கிறது


அதன் வெறித்த பார்வை
படகுடன் உள்ளே சென்ற
ஆதாமைப் பற்றியது தானென்று
சொல்ல வேண்டியிருக்காது தானே...
பகல்களில் தேய்ந்து கிடக்கும் 
ஆதாமின் இருண்ட ஆப்பிள் கனவுகள்
மாலை ஆக ஆக
நீண்டு வாளர்ந்து
படர்ந்து சூழ்ந்து
ஒவ்வொரு நாளின் பிற்பகுதியிலும்
இரவாகி விடுகிறது...
விடிந்த பின்பும்
நிழல்களின் உடலில்
அப்பிக்கொள்கிறது அதே முந்தைய இரவு...

Monday, 6 January 2020

Dear Love,


While I was waiting for your love, 
I started loving myself... 
That makes me wait for your love 
until to the time of infinite...

Saturday, 4 January 2020





அன்புள்ள அம்மாவுக்கு...


         நான் தூங்கிவிட்டதாக நினைத்து அப்பாவிடம், "அழகான பொண்ணுங்களவே புடிக்கலைனு பையன் வீட்டுல சொல்லிட்டு போறாங்க... நாம இப்படி அசிங்கமா பெத்து வெச்சிருக்கோம் நம்மல எப்படியெல்லாம் சொல்லுவாங்களோ"னு சொன்னாயே அம்மா... யார் வேண்டுமானாலும் இந்த உலகத்தில் யாரை வேண்டுமானாலும் வெறுக்கலாம், கேலி பேசலாம். இந்த 23 ஆண்டுகளில் விதம்விதமான கேலிகளையும் வெறுப்புகளையும் பார்த்தாகி விட்டது அம்மா... எல்லாமே பழகிப் போய்விட்டது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லுவார்களே, நீயே என்னை அசிங்கமென்று சொல்லிவிட்டாயே அம்மா. நான் குண்டாகப் பிறந்தது என்னுடைய தவறா?. ஒல்லியாகவும் வெள்ளையாகவும் இருப்பது தான் அழகு என்று எல்லா ஆண்களும் நினைப்பது போல, நீயும் நினைக்கிறாயா அம்மா.. பூ இருந்தால் போதாது, வாசமும் வேண்டுமென்று வசனம் பேசுகிறாயே, உன் வேதனையும் பயமும் எனக்குப் புரிகிறது.. ஆனாலும் நீ பேசிய வார்த்தைகள் எனக்கு எத்தகைய வலியைத் தருமென்று உனக்குப் புரியவில்லையா அம்மா..