Powered By Blogger

Wednesday, 6 July 2016

கருவிழிகள்
**************

கண்ணீர்க் குளத்தின்
கருப்புத் தாமரைகள்....
கவிதை
*********

காகிதத்திற்குக்
கைரேகை வரைந்தேன் -
கவிதையின் வடிவில்...
நாளிதழ்
*************

காசு கொடுத்துக்
கவலை வாங்கினேன் -
நாளிதழ்..

அமாவாசை வானம்
**********************

 என் நிலாக்குட்டியைக்
கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று
வயிறு புடைத்துக்
கொழுத்து நிற்கிறது -
அமாவாசை வானம்....
காதல்
********

வார்த்தைகளால்
வலை வீசும் வதந்தி....
மழை
*******

வானில் யாரோ
கவிதை எழுதுகிறார்கள் -
பேனா மையை
நிலத்தில் உதறிவிட்டு...