Powered By Blogger

Monday, 27 June 2016

கைக்கிளை
**************

அன்பின் ஐந்திணைகளுள்
விளைந்த விருட்சத்தில்
கண்மணி நான் கைக்கிளையே...!!!
என் இருளைக் கூட
வெண்மையாக்கி விடுகிறேன் -
கருப்பு நிலவாக 
நீ மட்டும் கிடைத்தால் ...
வாழிய  செந்தமிழ்...
************************

நன்னீரும் நாளை
செவ்வாயில் கொட்டும்..
அதுவும் கூடச்
செந்தமிழ் பேசியே சொட்டும்..

வாழிய செந்தமிழ்...!!!

Sunday, 26 June 2016


டார்வின் 
சிலேடை செய்தார்..
வலியது வாழும் -
 உலகத்திலும் 
உள்ளத்திலும்....!!
அப்பா
*********

அவரது பாதங்கள் ஏறுவது
பனையும் தென்னையும் தான்..
எங்கிருந்து வந்தது -அவற்றில்
வேம்பின் செதில் பதிப்பு...???!!